TooBrief TooBrief

Home / Headlines

300 சீர்வரிசைகளா? சேலத்தில் விநாயகர் சதுர்த்திக்கு நடந்த பிரம்மாண்ட வழிபாடு!

ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14

300 சீர்வரிசைகளா? சேலத்தில் விநாயகர் சதுர்த்திக்கு நடந்த பிரம்மாண்ட வழிபாடு!

சேலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள 300 வகையான சீர்வரிசைகளுடன் கூடிய சித்தி புத்தி விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு சேலம் மாநகர் செவ்வாய்பேட்டையில் எலைட் நண்பர்கள் குழு சார்பில் 46வது ஆண்டு படைப்பாக வைக்கப்பட்டுள்ள சித்தி புத்தியுடன் கல்யாண கோலத்தில் காட்சியளிக்கும் விநாயகரின் திரு உருவம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Read original on ABP Tamil Get the app

Licensed summary · LicensedSummary

Related briefs