TooBrief TooBrief

Home / Headlines

மதுபோதையில் விபரீதம்! பிரியாணிக்காக கொதிக்க வைத்த வெந்நீர் அண்டாவில் தவறி

ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14

மதுபோதையில் விபரீதம்! பிரியாணிக்காக கொதிக்க வைத்த வெந்நீர் அண்டாவில் தவறி

புதுச்சேரி: வில்லியனூரில் உறவினர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு மதுபோதையில் சென்ற ஓட்டுநர், பிரியாணி தயாரிப்பதற்காக கொதிக்க வைத்திருந்த வெந்நீர் அண்டாவில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன். ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், சரிவர வேலைக்குச் செல்லாமல் மது அருந்தும் பழக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் ஹோட்டலுக்கு சென்றார் இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி தேவநாதன் மதுபோதையில் வில்லியனூரில் உள்ள தனது உறவினர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் பிரியாணி தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

Read original on ABP Tamil Get the app

Licensed summary · LicensedSummary

Related briefs