ABP Tamil · Technology · 2026-09-13
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே
பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிளாக்ஷிப் போன்களை குறைந்த விலையில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ ‘Certified Re-Newed’ திட்டத்தின் கீழ் கேலக்ஸி S26 சீரிஸ் போன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய போன்களை வாங்குவதை விட குறைந்த செலவில் பிளாக்ஷிப் அனுபவத்தைப் பெற முடியும். Certified Re-Newed என்றால் என்ன? சாம்சங்கின் Certified Re-Newed திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட போன்கள் அல்ல. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் சாம்சங் நிறுவனத்தின் தரநிலைகளுக்கு ஏற்ப பரிசோதிக்கப்பட்டு, தேவையான பகுதிகள் மாற்றப்பட்டு, மீண்டும் விற்பனைக்கு தயார்படுத்தப்படுகின்றன.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary